யாழில், டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பிரதேச செயலகத்துக்குட்பட்ட J 81கொட்டடி மீனாட்சிபுரம் கிராமத்தில்  டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வருவதனை   கருத்தில் கொண்டு யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் பணிபுரையின் கீழ் பொது மக்களின் பங்கேற்புடன் இன்றைய தினம் டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த டெங்கு ஒழிப்பு  வேலை திட்டத்தில் கொட்டடி பகுதியைச் சேர்ந்த பெருமளவிலான மக்கள் பங்கேற்றதோடு ராணுவம் பொலிசார் மற்றும் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதாரப பிரிவு உத்தியோகத்தர்கள்  யாழ்ப்பாண பிரதேச செயலர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்.அப்பகுதி  கிராம சேவையாளர்  என பலரும் குறித்த டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தில் கலந்து கொண்டு டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவாக வீதியில் காணப்பட்ட  புற்கள்,குப்பைகள்  அகற்றப்பட்டன,

Leave a Reply