கொழும்பில் கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு – பம்பலபிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்றிரவு இடம்பெற்றது.

வெள்ளவத்தை பகுதியிலிருந்து யுவதி ஒருவரும், இளைஞர் ஒருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளில் வயோதிபர் ஒருவர் மோதுண்டுள்ளார்.

பம்பலபிட்டி வஜிரா ஆலயத்திற்கு முன்பாக இந்த விபத்து நேர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

50 வயது மதிக்கத்தக்க ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பம்பலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply