வெளிநாட்டில் உள்ளவரிடம் ஒரு கோடி ரூபா பணத்தை சுருட்டிய யாழ்ப்பாண அக்கா தங்கச்சி?

நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரை ஏமாற்றி 120 மில்லியன் ரூபாவை, சுருட்டிய இரண்டு பெண்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம், நாவந்துறை பகுதியை சேர்ந்த 30 மற்றும் 34 வயதுடைய சகோதரிகள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 
குற்றப்புலனாய்வு பிரிவினர் இவர்கள் இருவரையும் நேற்று கைது செய்து பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இதன்போது அவர்கள் டிசம்பர் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply