அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர் இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு: 5பேர் உயிரிழப்பு- 25பேர் காயம்!

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள ஓரின சேர்க்கையாளர் இரவு விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்வபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததோடு 25பேர் காயமடைந்துள்ளனர்.

கொலராடோ ஸ்பிரிங்ஸில் உள்ள கிளப் கியுவில், நேற்று முன் தினம் (சனிக்கிழமை) இரவு இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றது.
சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் இரண்டு துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டதுடன், தாக்குதல் நடத்தியவர் நீண்ட ரக துப்பாக்கியை பயன்படுத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணத்தை பொலிஸார் வெளியிடவில்லை. இது ஒரு வெறுப்புக் குற்றமா அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் தொடர்புடைய தாக்குதல் சம்வமா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply