சட்டவிரோத ஆயுத களஞ்சியத்தை வைத்திருந்த நபர் கைது

மாளிகாவத்தை – லக்செத்த செவன வீடமைப்பு தொகுதியில் சட்டவிரோதமான முறையில் ஆயுத களஞ்சியம் ஒன்றை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

03 கத்திகள், இரு கைக்கோடரிகள், உள்ளிட்ட மேலும் சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply