கொழும்பில் ஆயுதக் கிடங்கு முற்றுகை – சிக்கிய வாள்வெட்டுக் கும்பல்

கொழும்பில் கூரிய ஆயுதங்களுடன் சந்தேக நபர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

மாளிகாவத்தை போதிராஜா மாவத்தையைச் சேர்ந்த 22 வயதுடைய சந்தேக நபரொருவர் 03 வாள்கள், 02 கைக் கோடரிகள் மற்றும் கூரிய ஆயுதம் என்பனவற்றை பாரிய குற்றத்தை செய்யும் நோக்கில் வைத்திருந்த நிலையில், கைது செய்யப்பட்டு மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

மாளிகாவத்தை பொலிஸ் நிலைய அதிகாரிகள், ஆயுதங்களை சேகரித்த காரணத்தையும் எவ்வகையான குற்றம் செய்ய முயற்சித்தமை என்ற கோணம் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து  வருகின்றனர்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் உத்தரவுக்கமைய, விசேட அதிரடிப்படையின் தலைமையக முகாமில் கடமையாற்றும் மற்றும் கொழும்பு பிரதேசத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள D வலய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், புலனாய்வு பிரிவு பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வி.ஜி. ரொஹான் கருணாரத்ன (புலனாய்வு/விசேட நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு) அவர்களின் மேற்பார்வையிலும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சாகர குலசேகரவின் வழிகாட்டுதலின் கீழும், பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயசுந்தர உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று மாளிகாவத்தை லக்சேத செவன வீடமைப்புத் தொகுதியில் உள்ள வீடுகளை சோதனையிட்டபோது குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply