நீண்ட நாட்களாக மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்த ஆசிரியர் சிக்கினார்

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  அதுல ரத்நாயக்க அவர்களின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி DIG, சட்டத்தரணி வருண ஜயசுந்தர, விசேட அதிரடிப்படை கட்டுகுருந்த பயிற்சிப் பாடசாலையின் பிரதான பொலிஸ் பரிசோதகர் சமில மாரப்பன உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கடந்த சனிக்கிழமை (19.11.2022) அன்று களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுத்துறை தெற்குப் பகுதியில் சோதனை நடவடிக்கையொன்றை நடத்தியிருந்தனர்.

அங்கு, உரிமம் இல்லாமல் மற்றும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், தடை செய்யப்பட்ட ‘1299’ PREGABLIN 150mg வகை காப்ஸ்யூல்கள் (போதைப்பொருள் காப்ஸ்யூல்கள்) கைப்பற்றப்பட்டன. 

இதனை தன்னகத்தே வைத்திருந்த சந்தேக நபர் களுத்துறை கல்லூரியில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாடகை அடிப்படையில் வசிப்பவரும் தரம் 4, 5, 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்கள் தொடர்பான கற்பித்தல் வகுப்புகளை நடாத்தும் நபர் ஒருவராவார். 

மாவனல்லை பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் களுத்துறை கல்லூரி மாணவர்களை இலக்கு வைத்து நீண்டகாலமாக இந்த போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளதாக விசாரணகளின் போது தெரியவந்துள்ளது. 

மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபர் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply