பெற்றோல்,பூச்சி உருண்டையை மணந்து பார்த்த மாணவிக்கு நேர்ந்த கதி

தெனியாய, கொலவெங்கம பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் பெற்றோல் ஆவியை சுவாசித்து உயிரிழந்துள்ளார்.

பல்லேகம, கொலவெங்கம, ஹதமுனஹேன, பல்லேகம கொலவெங்கம மகா வித்தியாலயத்தில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயதுடைய ஹெனகம மனகே சதுரிகா சண்டமாலி என்ற மாணவியே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 சிறுமி வீட்டில் இருந்த பெற்றோலைத் திறந்து புகையை சுவாசித்ததால், தெனியயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனாலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இறந்த மாணவி பள்ளியிலிருந்து வரும்போதும், வீட்டில் இருக்கும் போதும் கட்டிலில் அமர்ந்து கற்பூர,பூச்சி  உருண்டைகளை நுகர்வது  வழக்கம் என்றும் தெரியவருகிறது

 தனது மகள் பெட்ரோல் குடித்துவிட்டு தனது அறையில் படுக்கையில் படுத்திருந்ததாக சிறுமியின் தந்தை பொலிஸில் தெரிவித்துள்ளார். மாணவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் ஏற்கனவே பெட்ரோல் ஆவிகள் உடலில் நுழைந்ததால் அவர்  ஆபத்தான நிலையில் இருந்ததாகவும் பொலிஸார்  தெரிவித்தனர்.

Leave a Reply