அடுத்த தேர்தலில் பா.ம.க. தலைமையில் ஆட்சி அமைப்போம் – அன்புமணி ராமதாஸ்

அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. தலைமையில் ஆட்சி அமைப்போம் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பா.ம.க 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு பா.ம.க. கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், இன்று சென்னையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையிலான ஆட்சி அமைப்போம் என கூறியுள்ளார்.

இருப்பினும் பா.ம.க. தலைமையிலான கூட்டணியில் அ.தி.மு.க. இடம்பெறுமா அல்லது கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply