<!–
உல்லாசப் பிரயாணிகளுடனான ஒன்பது பயணிகள் கப்பல்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இலங்கை துறைமுகங்களை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த வாரம் 880 பயணிகளை ஏற்றிய கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்ததாகவும் தெரிவித்த அவர், 3 ஆயிரம் பயணிகளுடன் எதிர்வரும் 28ஆம் திகதி மற்றுமொரு கப்பல் நாட்டிற்கு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






