வெளிநாட்டு பணிகளுக்கான பதிவுகளில் புதிய கட்டுப்பாடு

இரு மத்திய கிழக்கு நாடுகளுக்கு இரண்டு தொழில் பிரிவுகளுக்கான பணியாளர்களாக, தனிநபர் விசா கொண்ட இலங்கைப் பெண்களை பதிவு செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதற்கமைய, ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு, பயிற்றப்படாத மற்றும் வீட்டுப்பணிகளுக்காக இலங்கைப் பணிப்பெண்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை இவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply