முன்மொழியப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு தீர்மானங்களை முறைப்படுத்துவதற்காகவும் மக்கள் மயப்படுத்துவதற்காகவும் எனும் தொணிப்பொருளில் தேர்தல் ஆணைக்குழுவின் வழிநடத்தலில் தேர்தல் முறைகளுக்கான சர்வதேச ஒன்றியம் (IFES) மற்றும் ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவனம் (IRES) ஆகியவற்றால் ஒத்துழைப்புடன் கலந்துரையாடலொன்று வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 2.00 மணி வரை இடம்பெற்றது
இதன்போது தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நிகழ்ச்சி திட்டத்தின் நோக்கங்களை தெளிவுபடுத்தியிருந்தார் .
அதனைத்தொடர்ந்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தேர்தல் ஆணைக்குழுவின் வேலைத்திட்டம் மற்றும் தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான உத்தேச பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான அதன் கண்ணோட்டம் பற்றிய பகுப்பாய்வு தொடர்பிலான பிரதான உரையினையும் ஐனநாயக சீர்திருத்தம் மற்றும் தேர்தல் ஆய்வுகள் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் மஞ்சுள கஐநாயக்க தற்போதைய தேர்தல் நடைமுறையினை சீர்திருத்த வேண்டியதன் அவசியம் மற்றும் அதில் சிவில் சமூகத்தின் பங்கு தொடர்பிலும் உரைகளை நிகழ்த்தியிருந்தனர் . 
இறுதியில் பங்கேற்பாளர்களின் கருத்துக்களை பெறுவதற்கான திறந்த உரையாடலுடன் குறித்த கலந்துரையாடல் நிறைவுற்றது.
இக் கலந்துரையாடலில் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் , கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் , ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





