சாரணர் இயக்கத்தை விஸ்தரிக்க ஒத்துழைப்பு வழங்குவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

2024ஆம் ஆண்டில் சாரணர் இயக்கத்தை ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கியதாக விஸ்தரிப்பதற்கு தேவையான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற இலங்கை தலைமை சாரணர் மற்றும் போசகர் பதவிகளை உத்தியோகப்பூர்வமாக வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அதன் அங்கத்துவத்தை 2 இலட்சமாக அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு ஆகியனவற்றின் ஒத்துழைப்பினை பெறவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ், காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தன தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சிகளில் இணைந்து செயற்படுமாறும் சாரணர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply