போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு, இந்தியாவிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் நடத்தப்பட்ட சத்திர சிகிச்சை வெற்றியளிக்காத நிலையில், அவர் சிங்கப்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரபல சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், இந்த சத்திர சிகிக்சை வெற்றியளிக்கவில்லை என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் சார்பில், எந்தவொரு உத்தியோகப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, பந்துல குணவர்தனவிற்கு பதிலாக, ஊடகத்துறை பதில் அமைச்சராக ஷாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.





