தமது மூதாதையர்கள் சடலங்கள் புதைக்கப்பட்ட மயான பூமியை நிர்வாகம் கையகப்படுத்த முற்படும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதுளைஇஹாலிஎல் டிக்வெல்ல தோட்ட பொதுமக்கள்இ நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பிட்டு பிரதேசத்தில் அலிப்பேர உற்பத்தி என்ற போர்வையில் தொடர்ந்து மயான பூமிகள் அபகரிக்கப்படுகிறது.
இதன் போது எலும்புக்கூடுகள் வெளி வருகின்றன. இது எமது மூதாதையர் உடையது.
அதனை காணும் போது எங்களுக்கு மிகவும் மனவருத்தம் ஆகின்றது.
அதனை காணும் போது எங்களுக்கு மிகவும் மனவருத்தம் ஆகின்றது. இனி வரும் சடலங்களையும் இங்குதான் புதைக்க வேண்டும். மிச்சமிருக்கும் மயான நிலத்தையாவது விட்டு வையுங்கள் என கோரிக்கையும் முன் வைத்துள்ளனர்.
இதனை நாங்கள் எதிர்த்தால் தோட்டத்தில் எங்களுக்கு தொழில் வாய்ப்பு இல்லை எனும் நிர்வாகம் மிரட்டுகிறார்கள் என்றும் கூறியுள்ளனர். இதற்காக அரசியல் தலைவர்கள் முன்வந்து எங்களுக்கு நல்லதொரு பதிலை பெற்று தரவேண்டும் எனவும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





