
அனுபமிக்க மலையக தோட்ட தொழிலாளர்கள் சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றினால் நாட்டிற்கு வருமானத்தை ஈட்டி தருவார்கள். அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்ற நடவடிக்கை எடுங்கள் என்று தான் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக்கொள்வதாக முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
திறமை மிக்க தோட்டத் தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கு டொலர்களை பெற்றுக் கொடுக்கக்கூடியவர்கள்.
அவர்களை சிறுதொட்ட உரிமையாளர்களாக மாற்ற நடவடிக்கை எடுத்தால் அதற்கு பூரண ஒத்துழைப்பை தர நான் தயாராக உள்ளேன் எனக் கூறியுள்ளார்.
தோட்ட தொழிலாளர்களுக்கு நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ள வீடுகளுக்கு 3000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை அறவீடுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் தற்போது உள்ள பொருளாதார நெருக்கடியில் ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்று மிகவும் மோசமான வாழ்க்கையை நடத்தும் தோட்ட தொழிலாளர்களிடமிருந்து குறிப்பிட்ட அளவீடுகளை மேற்கொள்ள வேண்டாம் என நாம் கேட்டுக் கொள்கின்றோம்.
நாட்டில் வெறும் 25 சதவீதமாக உள்ள சிறு தோட்ட பயிற்செய்கை 75 சதவீதம் ஏற்றுமதி மேற்கொண்டு வருகின்ற போது ,75 சதவீதம் உள்ள பெருந்தோட்டங்களில் இருந்து 25 சதவீதம் வீதமான தேயிலையே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கு அந்த தோட்டங்கள் முறையாக பராமரிக்கப்படாமையே காரணம்.
தோட்ட தொழிலாளர்களுக்கு அந்தத் தோட்டங்கள் பிரித்து வழங்கப்பட்டால் அதன் மூலம் சிறந்த ஏற்றுமதி வருமானத்தை பெற்று நாட்டை வளப்படுத்த முடியும் என அவர் மேலும் கருத்து தெரிவித்துள்ளார்.





