இலங்கையில் சிகரட் விற்பனை அமோகம் – கொட்டும் கோடி ரூபாய்கள்

  2021  ஆம் ஆண்டு  முதல் சிகரெட்டுகளுக்கான கலால் வரி அதிகரிப்பு காரணமாக, 2021 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 62.3 பில்லியன் ரூபாய் கிடைத்தது.

 2022 ஆம் ஆண்டில்  அதே காலப்பகுதியில் சிகரெட்டுகளுக்கான கலால் வரியின் வருமானம் 32.6 சதவீதம் அதிகரித்து இதனால்  82.6 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.

2021 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுடன் ஒப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் சிகரெட் விற்பனை 1,694 மில்லியன் சிகரெட்டுகளிலிருந்து 2,204 மில்லியன் சிகரெட்டுகளாக 30.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
 
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ‘பொது நிதி மேலாண்மை அறிக்கை 2023’ல் இந்த விடயம்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

மேலும், வரிக்குப் பிந்திய இலாபம் 14.11 பில்லியன் ரூபாவாகும். லங்கா புகையிலை நிறுவனம் 2022 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த 09 மாத காலப்பகுதிக்கு அரசாங்க வரியாக 94.24 பில்லியன் ரூபாவையும் வருமான வரியாக 10.10 பில்லியன் ரூபாவையும் அரசாங்கத்திற்கு செலுத்தியுள்ளது.

Leave a Reply