தேசிய மருந்துக் கொள்கையில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

<!–

தேசிய மருந்துக் கொள்கையில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி – Athavan News

தேசிய மருந்துக் கொள்கையில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2005ஆம் ஆண்டு மருந்துக் கொள்கை அறிவிக்கப்பட்டு ஏறக்குறைய 15 ஆண்டுகள் கடந்துவிட்டதாகவும் தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு கொள்கையை திருத்தியமைக்க வேண்டியதன் அவசியத்தை அரசு அங்கீகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்காக சுகாதார அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட குழுவினால் தேசிய மருந்துக் கொள்கையில் திருத்தம் செய்ய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல முன்வைத்த யோசனைக்கு நேற்று (திங்கட்கிழமை) கூடிய அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Leave a Reply