கருக்கலைப்பு மேற்கொண்ட பெண் உயிரிழப்பு : விசாரணை நடைபெறுகின்றது அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கள்ளக்குறிச்சியில் கருக்கலைப்பு செய்த கர்ப்பிணிபெண் பலியான விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களின் ஆலோசனை, பரிந்துரைகளின் அடிப்படையில் மருந்துகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.

அசகளத்தூர் கிராமத்தில் கருக்கலைப்பு செய்ததாக கூறப்பட்ட மருந்தகத்தில் மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

உயிரிழந்த பெண்ணின் கணவர் கொடுத்த முறைப்பாட்டில் வேப்பூர் பொலிஸார் வழக்கு பதிந்து வடிவேல் என்ற நபரை கைது செய்தனர்.

விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை தொடர்பாக அறிக்கை வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Leave a Reply