தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சியில் ,பல்வேறு வகையான கார்கள் சந்தையில் விற்பனையாகிறது.இந்த நிலையில் 1990 ஆண்டு அல்லது அதற்கு முன்னர் பயனப்டுத்திய கார்கள் இப்போது கண்காட்சிப் பொருளாக மாறி விட்டது.இலங்கையில் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்ட கார்கள் இப்போது பல ஹோட்டல்களில் காட்சிப் பொருளாக மாறிவிட்டது.
இந்த நிலையில் பேச்சு வழக்கில் ஆமைக் கார்கள் என்று அழைக்கப்படும் (Volkswagen Beetle Owners Club of Sri Lanka) தமது 25 ஆவது ஆண்டை கொண்டாடும் நோக்கில் அண்மையில் கொழும்பில் பல்வேறு நிறங்களில் இந்த கார்களை வரிசைப் படுத்தினர்.இதனை கண்காட்சி போல பல மக்கள் ஆச்சரியமாக பார்வையிட்டனர்.






