இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் இன்றையதினம் மாலை யாழ் மாநகர சபைக்கு விஜயம் மேற்கொண்டார்.
இந்நிலையில் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் ஆகியோருடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இந்நிலையில் குறித்த கலந்துரையாடலில் யாழின் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதுடன் யாழில் உள்ள பாடசாலை மாணவர்களை பாகிஸ்தானுக்கு அழைத்து அங்கு கல்வி வாய்ப்பு வழங்கமுடியும் எனவும் தெரிவித்ததாக யாழ் மாநகர முதல்வர் தெரிவித்தார்.











