வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையின் 77 வது வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக  121  வாக்குகளும், எதிராக  84  வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

ஒருவர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

இதனிடையே, 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதங்கள் நாளை ஆரம்பிக்கவுள்ளன.

இந்த விவாதங்கள் எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி வாக்களிப்புடன் நிறைவு பெறவுள்ளன.

Leave a Reply