இந்தோனேசியா மக்களுக்காக இந்தியா துணை நிற்கும்-மோடி

<!–

இந்தோனேசியா மக்களுக்காக இந்தியா துணை நிற்கும்-மோடி – Athavan News

இந்தோனேசியா நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நேற்று 5.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது இந்த நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ள அதேவேளை 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தநிலையில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் மோடி நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதோடு காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்


Leave a Reply