அல்லூரி,நவ 22
ஆந்திர பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டத்திற்கு உட்பட்ட சிந்தூர் மண்டலத்தின் பொட்டுகுடெம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மினிவேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அந்த மினிவேனில் பக்தர்கள் பயணம் செய்து கொண்டிருந்து உள்ளனர். இந்நிலையில், எதிரே பத்ராசலம் நோக்கி வந்த லாரி ஒன்றின் மீது மினிவேன் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பக்தர்களில் 6 பேர் உயிரிழந்தனர். ஒரு பெண் மற்றும் சிறுவன் உள்பட 4 பேர் காயமடைந்து உள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்த நபர்களை மீட்டு உடனடியாக சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கியவர்கள் அனைவரும் சத்தீஷ்காரை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. தெலுங்கானாவில் பத்ராசலம் பகுதியில் ராமர் கோவிலுக்கு புனித பயணம் சென்று விட்டு அவர்கள் திரும்பும்போது இந்த விபத்து நடந்து உள்ளது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





