அதிகரித்த வண்ணம் உள்ள தொற்றுநோய்களால் பெரும் அச்சுறுத்தல்- வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம்!

தற்பொழுது இலங்கையில் தொற்று நோய்கள் பல அதிகரித்த வண்ணம் இருக்கின்றன, இவை சுகாதாரத் துறையை பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாக கூடிய சாத்திய கூறுகள் இருக்கின்றன என அரச மருத்துவ அதிகாரிகள் சங்க மத்திய குழு உறுப்பினரும் ஊடகக் குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.

மேலும் இவ்வூடக சந்திப்பில் கருத்து தெரிவித்த வைத்தியர்… எதிர்வரும்  வாரத்திலேயே உலக எயிட்ஸ் தினம் கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில், இந்த நோய் பற்றி பிரதானமாக நாங்கள் கருத்தில் எடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். மேலும், இந்த எய்ட்ஸ் நோயை பார்த்தோமேயாக இருந்தால், இது உலகளாவிய ரீதியில் பாரிய தொற்று நோயாக வியாபித்து காணப்படுகின்றது.

 தற்பொழுது உலகளாவிய ரீதியில் 38.4 மில்லியன் எய்ட்ஸ் நோயாளர்கள் இருக்கின்றார்கள் கடந்த வருடத்திலேயே 1.5 மில்லியன் தொற்றாலர்கள் புதிதாக இனம் காணப்பட்டார்கள். 6 லட்சத்து 50 ஆயிரம் வரை மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 

Leave a Reply