
ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கீரியகொல்ல பகுதியில் வீட்டுக்கு பின்புறம் புதையல் தோண்டுவதாக, பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து கீரியகொல்ல பகுதிக்கு விரைந்த பதுளை குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேகத்துக்கு இடமான, இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது புதையல் தோண்டிய குற்றசாட்டில் 58 வயதுடைய கீரியகொல்ல பகுதியை சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
அத்தோடு புதையல் தோண்ட பயன்படுத்தப்படும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் குறித்த நபரையும் புதையல் தோண்ட பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் குற்றத்தடுப்பு பொலிஸார் ஹாலிஎல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
நாளைய தினம் பதுளை நீதிமன்றத்தில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஹாலிஎல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். மற்றும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





