தனது வயலுக்குள் ஆட்டுக்குட்டிகளை அனுப்ப வேண்டாம் எனக் கூறியவர் மீது கொடூரமாக மண்வெட்டியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவமொன்று திருகோணமலை நொச்சிக்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த தாக்குதலில் நொச்சிக்குளம்- சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய வேலாயுதம் ராஜேந்திரன் என்பவர் பலத்த காயமடைந்துள்ளார்.
தாக்குதலால் கை உடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது அங்கு பெறப்பட்ட XRAY மூலம் கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் குறித்த நபரின் கை உடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மண்வெட்டியால் தாக்குதல் நடாத்திய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் ஊர் மக்களிடையே பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.





