´மன்ன கண்ணா´ எனப்படும் பாதாள உலகக்குழு உறுப்பினரான மாரிபுத்து கணேசன் என்பவர் மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு 13 மற்றும் கொழும்பு 14 ஆகிய இடங்களில் வசிக்கும், 20 முதல் 42 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
கடந்த 19ஆம் திகதி நவகம்புரா பகுதியில் மன்ன கண்ணா மீது துப்பாக்கிச்சூட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் இந்த நால்வரும் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.





