பாடசாலை மாணவர்களுக்கு அதிர்ச்சி – அடுத்த ஆண்டு இலவச பாடப் புத்தகம் இல்லையா?

மேலதிக நேர கொடுப்பனவு வழங்கல் பிரச்சினையை முன்வைத்து அரச அச்சக ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அரசாங்க செய்தியாளர் சங்கத்தின் பிரதிநிதி திரு.நுவான் புத்திக, இந்த நெருக்கடி தொடர்பில் தமது ஊழியர்கள் பல மாதங்களாக கலந்துரையாடிய போதும் தீர்வு கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

இது தொடர்பில், வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளருடன் இன்று (23) கலந்துரையாடவுள்ளதாக அரசாங்க ஊடகப் பணிப்பாளர் திருமதி கங்கா கல்பானி லியனகே தெரிவித்தார்.

மேலும், இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறினார்.

தொடர்ச்சியாக அச்சக ஊழியர்கள் போராட்டம் நடாத்தினால் ,பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட அச்சுப் பதிப்பு வேலைகள் பாதிக்கப்படும் என கல்விச் சமூகத்தினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply