இன்னொரு போராட்டத்திற்கு இடமளிக்கப்போவதில்லை – ரணில்

<!–

இன்னொரு போராட்டத்திற்கு இடமளிக்கப்போவதில்லை – ரணில் – Athavan News

நாட்டில் இனியொரு போராட்டத்திற்கு இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அவ்வாறான நடவடிக்கையை பாதுகாப்புப் படையினரைப் பயன்படுத்தி தடுக்கப் போவதாகவும் அவர் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

எனினும் வீதிகளை மறித்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பொலிஸாரின் அனுமதியைப் பெற்று எவரும் எந்தவொரு போராட்டத்தையும் நடத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

‘நான் அவசரநிலையை கூட அறிவிப்பேன் மற்றும் அத்தகைய நடவடிக்கையை முறியடிக்க பாதுகாப்புப் படைகளை அழைப்பேன்’ என்றும் அவர் மேலும் கூறினார்.


Leave a Reply