நாட்டைப் பற்றி சிந்தித்து போராட்டங்களை நிறுத்துங்கள் – குமார வெல்கம

நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் நாட்டைப் பற்றிச் சிந்தித்து ஓரிரு வருடங்கள் போராட்டத்தை நிறுத்துமாறு குமார வெல்கம கேட்டுக்கொண்டுள்ளார்.

போராட்டங்கள் மூலம் ஒரு நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச்செல்ல முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வந்தால்தான் டொலர்கள் வரும் என்றும் போராட்டங்கள் நடத்தினால் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply