தோட்ட லயன் தொடர் குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகல தோட்டத்தின் அப்பர் கிரான்லி பிரிவிலுள்ள தோட்ட லயன் குடியிருப்பொன்றில்  திடீர்  தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.  இந்த தீ விபத்தில் குடியிருப்பொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த தீ விபத்தில் குடியிருப்பிலிருந்த  அனைத்து பொருட்களும் முற்றாக எரிந்து சாம்பல் ஆகின . 

இத் தீயினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும்,குறித்த குடியிருப்பில்  வசித்த 8 பேர் தற்போது அத் தோட்டத்திலுள்ள பொது வாசிகசாலை கட்டிடத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும்  தோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மேலும் இப் தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. இதற்கான மேலதிக விசாரணைகளை லிந்துளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply