பிணையில் இன்று காலை விடுதலையான கல்வெவ சிறிதம்ம தேரருக்கு விளக்கமறியல்

<!–

பிணையில் இன்று காலை விடுதலையான கல்வெவ சிறிதம்ம தேரருக்கு விளக்கமறியல் – Athavan News

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (புதன்கிழமை) பிணை வழங்கப்பட்ட அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜூன் 10ஆம் திகதி இசுருபாவில் கல்வி அமைச்சுக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைய கல்வெவ சிறிதம்ம தேரர் இன்று (புதன்கிழமை) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போதே அவரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


Leave a Reply