வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினை அண்மித்த பகுதியினை சுத்தப்படுத்தும் மக்கள்!

<!–

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினை அண்மித்த பகுதியினை சுத்தப்படுத்தும் மக்கள்! – Athavan News

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவ முகாமிற்கு அருகேயுள்ள காணியினை  சுத்தம் செய்யும் நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபட்டிருந்தனர்.

2022 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி இடம்பெற உள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி யின்  நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரனின் தலைமையில் குறித்த சிரமதானம் வேலைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை காலை பத்து முப்பது மணி அளவில் ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தினை அண்மித்த வளாகத்தில் தக்களால் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பின்னரே குறித்த சிரமதான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply