இலங்கையில் வித்தியாசமான திறப்பு விழா – பாடசாலைக்கு புதிதாக பெயர் சூட்டும் நிகழ்வு

மாணவர்களின் கல்வி தேர்சியை அதிகரிக்கும் முகமாகவும் நவீன தொழில் நுட்ப முறைகள் மூலம் கற்கைகளை கொண்டு நாடத்தவும் உருவாக்கப்பட்ட திறன் அபிவிருத்தி வகுப்பறைகள் திறப்பு விழா நிகழ்வு மற்றும் பாடசாலைக்கான புதிய பெயரான (மன்/அல்-ஹிரா மகா வித்தியாலயம்) எனும் புதிய பெயர் சூட்டும் நிகழ்வு  பாடசாலை அதிபர்  A.C பஸ்மி  தலைமையில் மன்னார் வலய கல்விப்பணிப்பாளர் தலைமையில்  இன்று காலை 10.00 மணியளவில் வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மேற்படி அமைக்கப்பட்ட இரண்டு அபிவிருத்தி வகுப்பறைகள் இன்றைய தினம் புதன்கிழமை மேற்படி வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டதுடன் வைபவ ரீதியாக பாடசாலையின் புதிய பெயரும் திறை நீக்கம் செய்யப்பட்டது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் வலய கல்வி பணிப்பாளர் திருமதி.தேவராஜ் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் அரம்ப பிரிவு  ஆசிரிய ஆலோசகர் பவுளாவாஸ் அவர்களும் முன்னால் பிரதேச சபை தவிசாளர் முஜாஹீர் அவர்களும் விசேட விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு பள்ளிபரிபாலன சபை உறுப்பினர்களான  திரு.ஹமீம்,திரு.அசீம் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

  நிகழ்வில் 2022 ஆண்டு மாணவ தலைவர்களாக தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கான சின்னங்களும் சூட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

Leave a Reply