6 மணிநேர நீர் விநியோகத்தடை

கட்டுகஸ்தோட்டை பாரிய கண்டி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை 24ஆம் திகதி  மு.ப. 8 மணி முதல் பி.ப. 2 மணி வரையிலான 6 மணிநேர நீர் விநியோகத்தடை பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

கஹவத்த, தெலும்புகஹவத்த, உருகொட, கஹல்ல, வலனகல மற்றும் ஹிராகடுவ ஆகிய நீர்த்தேக்கங்களை உள்ளடக்கிய பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைப்படும்.
இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

Leave a Reply