_637e13b5435c1.jpg)
கடல் தொழிலாளர் சங்கம் எம்மை நசுக்குகிறது என கிராஞ்சி மீனவர்கள் சார்பில்,பெண் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
கடந்த 55 நாட்களாக எங்கள் இலவங்குடா ,கிராஞ்சி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மீது கடற்தொழில் சங்கம் வழக்குத் தாக்கல்செய்துள்ளது.
எங்கள் பாரம்பரிய தொழில்களை கட்டாயமாக அகற்ற வேண்டும் எனவும் நாரா,நெக்ரா நிறுவனங்களினால் அமைக்கப்பட்ட கடலட்டை பண்ணையில், அளவை செய்யப்பட்ட கம்புகளை பிடுங்கியதாக கூறி பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதற்கு தலைவரிடம் கதைத்து நீதி கேட்க மீனவர்கள் சென்றிருந்தார்கள். இதனை கேட்டுக்கொண்டிருந்த சங்கத்தில் அங்கத்துவம் கொண்ட நிர்வாகத்தில் இல்லாத நபர் ஒருவர் தவறான ,முரண்பாடான வார்த்தை பிரயோகம் செய்து பொலிஸ் நிலையத்திற்கு பொய்யான முறைப்பாடு செய்திருந்தார்கள்.
இது தொடர்பாக விசாரணை செய்வதாக கூறி பத்தினாதர், மற்றும் மகேந்திரன் எனப்படும் இரு மீனவர்களையும் கைது செய்திருந்தார்கள்.எங்கள் நீதிகளை நிர்வாகத்திடம் கேட்க இயலாத கட்டத்தில் இருக்கின்றோம்.
இது எமக்கு வேதனை தருகின்ற விடயமாக இருக்கிறது.இதற்கு நீதி கிடைக்க வேண்டும். எங்களுக்குரிய நீதியினை பெற்றுத்தருவதற்கு எந்த அதிகாரிகளும் முன்வராமைக்கு என்ன காரணம் என்பது புரியவில்லை.
கடற்தொழில் செய்து சிறுபான்மை மக்களாக வாழ்வது என்பது நாட்டில் தவறாக கருதப்படுகிறது.இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.என்றார்.





