நாடளாவிய ரீதியில் பரவும் வைரஸ் நோய் – சுகாதார அமைச்சு மக்களுக்கு எச்சரிக்கை!

நாடளாவிய ரீதியில் இந்த நாட்களில் இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸுடன் ஒப்பிடுகையில், இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் ஒருவருக்கு இந்நோய் பரவும் அபாயம் உள்ளதால், முறையான சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் போலவே, இது இருமல் மற்றும் சளி ஆகியவற்றில் தொடங்கி நிமோனியா வரை மிக அரிதாகவே அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முகக்கவசம் அணிவது மற்றும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது போன்ற முறைகள் மூலம் இந்த நோயைக் குறைக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

நிலைமை மோசமடைந்தால் மாத்திரமே வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

Leave a Reply