யாழில் பொலிஸாருக்கு மோட்டார் சைக்கிளில் வித்தை காட்டிய நபருக்கு நேர்ந்த காதி

 பொலிஸாரின் சமிக்கையை மீறி மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவருக்கு,பருத்தித்துறை நீதிவான் நீதி மன்றம், ஒரு மாத காலம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

 இரு வாரங்களுக்கு முன்னர் பருத்தித்துறை பொலிசார் வீதிக்  கடமையில் ஈடுபட்டிருந்த போதும் வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை மறித்துள்ளனர். மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் வாகனத்தை  நிறுத்தாமல் சென்றுள்ளார்.

வாகன இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மோட்டார் சைக்கிள் உரிமையாளரை கண்டுபிடித்த பொலிஸார்  அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பொலிஸ்  கட்டளை அனுப்பப்பட்டு சந்தேகநபர் நேற்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

 வழக்கை விசாரித்த பருத்தித்துறை நீதிவான் 45,000 ரூபா தண்டப்பணமும் ஒரு மாத காலச் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

Leave a Reply