
வலப்பனை, தெரிப்பெய போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட முக்குனகாப்பிய, கலங்கவத்தை பகுதியில் மருமகன் மாமியாரை கூறிய ஆயுதத்தால் தாக்கியதில் மாமியார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த தாக்குதல் 22 ஆம் திகதி மாலை வேளையில் இடம் பெற்றுள்ளது. உலக உணவுத் திட்டத்தின் கீழ் முக்குனகாப்பிய கலங்கவத்தை பகுதியில் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடத்திற்கு வருகை தந்த குறித்த தாய் மற்றும் குறித்த தாயின் மகள், மகளின் கணவர் ஆகியோருக்கிடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
வாக்குவாதம் உச்சம் பெற்ற நிலையில் கோபமடைந்த 27 வயதுடைய மருமகன் மனைவியையும், மாமியாரையும் கூறிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
மனைவி சிறுகாயங்களுடன் தப்பிக்க, மாமியார் சம்பவ இடத்திலேயே பலியானார். குறித்த கொலையாளி போலீசாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தெரிப்பெய போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.





