யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பொலிஸார் இராணுவத்தினர் குவிப்பு

மாவீரர் நாள் எதிர்வரும் 27ம் திகதி வடமாகாணத்தின் சகல பகுதிகளிலும் நினைவுகூரப்படுவதற்கான ஒழுங்குகள் இடம்பெற்றுவரும் நிலையில் யாழ்.மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வீதி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள நிலையில், கோப்பாய் துயிலும் இல்ல பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வீதிச்சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 அத்துடன் வல்வெட்டித்துறையில் பிராபகரனின் வீட்டுக்கு முன்பாகவும் பொலிஸார்,மற்றும் இராணுவத்தினர்  குவிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

Leave a Reply