திருகோணமலையில் சுயதொழில் ஊக்குவிப்பு

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உணவு உற்பத்தி மற்றும் பசுமைப் புரட்சிக்கான கொள்கை பிரகடனத்திற்கமைய பெரியகுளம்,  இக்பால்நகர் கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் குடும்பங்களுக்கு, 4000  மரக்கன்றுகள் நேற்று 23ம் திகதி வழங்கப்பட்டது.

குச்சவெளி பகுதியின் மண் வளமானது, பயிர்ச் செய்கைக்கு உகந்தது இதனால் அப்பகுதி மக்களை உணவு உற்பத்தியிலும் பயிர்ச் செய்கையில் ஊக்குவிக்கும் நோக்கிலும் இவ்வாறான திட்டம் நடை முறைப்படுத்தப்படுகிறது.

இதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்த பிரதேச செயலாளர்,முஸ்லிம் எயிட் நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தார். முஸ்லிம் எயிட் நிறுவனம் ஊடாக வழங்கப்பட்ட குறித்த நிகழ்வில் குச்சவெளி பிரதேச செயலாளர் கே.குணநிதன்,கிராம அதிகாரிகள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முஸ்லிம் எய்ட்  நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள்,பள்ளி நிருவாகிகள்,கோவில் நிருவாகிகள்,பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply