தமிழ் கலாச்சாரத்தை பறைசாற்றும் சாகித்திய விழா- திருகோணமலையில்

திருகோணமலை – வெருகல் பிரதேச செயலகத்தின் தமிழ் இலக்கிய சாகித்திய விழா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் தலைமையில் இன்று 24 திகதி, வியாழக்கிழமை காலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வானது முழுமையாக தமிழ் கலாச்சார பண்பாடுகளை பிரதிபலிக்கும் வகையில் மிக சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது கும்மி நடனம், கோலாட்டம், கரகம், தென்மாங்கு நடனம், நாட்டுக்கூத்து, காவடியாட்டம் உள்ளிட்ட தமிழ் கலாச்சாரங்களை வெளிக்கொணரும் வகையில் நிகழ்வுள் இடம்பெற்றிருந்தன.

அத்தோடு கலை நிகழ்வுகளை செய்த கலைஞர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எச்.என்.ஜயவிக்கிரம கலந்து சிறப்பித்தார்.

ஏனைய அதிதிகளாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் சரண்யா சுதர்ஷன், மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக், வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் டீ.விஜயரகுவரன், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் முனவ்வறா நளீம், வெருகல் சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் அதிகாரிகள்  என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply