யாழில் வீதிக்கு இறங்கிய முதலை – பீதியில் மக்கள்..!

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் முதலையொன்று இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அச்சுவேலியில் இருந்து தொண்டைமானாறு செல்லும்  வீதிக்கு குறுக்காகவே உயிரிழந்த நிலையில் முதலை இருப்பதாக வெள்ளிக்கிழமை(25) காலை அவ்வீதியால் பயணித்தவர்கள் தெரிவிக்கின்றனர். 

உயிரிழந்த முதலையை அகற்றுவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொண்டைமானாறு ஏரியில் முதலை இருப்பதாக ஏற்கனவே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply