இலங்கையில் இப்படி ஒரு நாயா ? மக்களை கண்ணீரில் மூழ்க வைத்த நாய்

காலி பொலிஸ் நிலையத்தின் உத்தியோகபூர்வ நாய் பிரிவில் போதைப்பொருளைக் கண்டறிவதில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய லிஸ்டா (1371) என்ற நாய் , சுகவீனம் காரணமாக நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த நவம்பர் மாதம்  11 ஆம் திகதி , 2017 ஆம் ஆண்டு , நெதர்லாந்தில் பிறந்த லிஸ்டா, ஆகஸ்ட்  மாதம் 20 ஆம் திகதி , 2019 ஆம் ஆண்டு  அன்று காலி பொலிஸ் நிலையத்திற்கு கடமைக்காக சேர்க்கப்பட்டது.

போதைப்பொருள் சோதனைக்கு விசேட  பயிற்சி பெற்ற லிஸ்டா, இதுவரை 300க்கும் மேற்பட்ட ரெய்டுகளில் பங்கேற்றுள்ளது. ஹெராயின், ஐஸ், மரிஜுவானா உள்ளிட்ட மறைத்து வைக்கப்பட்டுள்ள போதைப் பொருட்களை கண்டுபிடிப்பதில் லிஸ்டா கில்லாடி.

போதைப்பொருள் கண்டுபிடிப்பதில் விசேட திறமையை வெளிப்படுத்திய லிஸ்டா, இலங்கையில் உள்ள தொலைக்காட்ஸ் ஒன்றில் ஒளிபரப்பான “கேங் ஆஃப் செவன்” என்ற தொலைக்காட்சி நாடகத்தில் நடித்ததன் மூலம் இலங்கை மக்கள் மத்தியில் பிரபலமானார்.

 இந்த நிலையில்  பிரேத பரிசோதனையின் பின்னர்  நேற்று  பிற்பகல் காலி பொலிஸ் மைதானத்தில் பூரண பொலிஸ் மரியாதையுடன் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன.

Leave a Reply