ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடர்: முதல் போட்டியிலேயே பிரேஸில் அணி வெற்றி!

கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின், குழுநிலைப் போட்டியில் பிரேஸில் அணி வெற்றிபெற்றுள்ளது.

குழு ஜி பிரிவில் இலங்கை நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பிரேஸில் அணியும் செர்பியா அணியும் மோதின.

லுசைல் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், பிரேஸில் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

இதில் பிரேஸில் அணி சார்பில், ரிச்சர்லிஸன் 62ஆவது மற்றும் 73ஆவது நிமிடங்களில் அணிக்காக இரண்டு கோல்களை அடித்துக் கொடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் பிரேஸில் அணி, 3 புள்ளிகளுடன் குழு ஜி பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

கடந்த 1934ஆம் ஆண்டு முதல் பிரேஸில் அணி, உலகக்கிண்ணத் தொடரில் தனது முதல் போட்டியில் வெற்றிபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply