இலங்கையில் தாஹ்மஹால் – காதலில் தோல்வியடைந்தவர் செய்த செயல்

இலங்கையிலும் ஒரு தாஜ்மகால் போன்ற காதல் சின்னம் இருப்பதை பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பதில்லை.

ஆனால் தன்னைப் பிரிந்து சென்ற காதலியின்  நினைவாக நபர் ஒருவர் உருவாக்கிய காதல் நந்தவனம் ஒன்று இலங்கையில் உள்ளது.

கொழும்பில் இருந்து தெற்கு அதிவேகப் பாதையில் செல்வதாயின் வெலிபன்னயில் அதிவேகப் பாதைய விட்டு வெளியில் வந்து அளுத்கம, தர்கா நகர் கடந்து மத்துகம,யடதொல விதியில் சென்றால் இந்த இடத்தை அடைய முடியும்.

இலங்கையின் புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணரான ஜெப்ரி பாவாவின் சகோதரர், பேவிஸ் பாவா இதனை நிர்மாணித்துள்ளார். அவர் காதலித்த பெண் திடீரென்று அவரை விட்டு விலகிச் சென்ற துக்கத்தில் தனிமை, கவலை என்பவற்றை மறப்பதற்காக அதனை கலைத்துவ வடிவில் வெளிப்படுத்தியுள்ளார்.

இதனை அடுத்து  இந்த பூங்கா மற்றும் அங்குள்ள விடுதி உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply