யாழ்.கொக்குவில் – கேணியடி பகுதியில் திருட்டு!

யாழ்.கொக்குவில் – கேணியடி பகுதியில் உள்ள வீடொன்றின் ஜன்னல் வழியாக தொலைபேசி மற்றும் பணம் ஆகியன திருடிச் செல்லப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது,

குடியிருப்புக்கள் அதிகமான கேணியடி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த
திருடன் வீட்டு ஜன்னலை திறந்து உள்ளே இருந்த பெறுமதியான தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளான்.

சம்பவம் தொடா்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
இதேவேளை கேணியடி பகுதியில் தொடா்ச்சியாக திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் பொலிஸாா் உாிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

என சுட்டிக்காட்டியுள்ள பாதிக்கப்பட்டவா்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இவ்வாறான திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக கூறினா்.

Leave a Reply