பரீட்சை பெறுபேற்றினை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொழும்பு,நவ 25

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் சில மணித்தியாலங்களில் வெளியாகவுள்ளன.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளது.

2021, மே 23 முதல் ஜூன் 01 வரை நாடளாவிய ரீதியில் 3,844 பரீட்சை மையங்களில் நடைபெற்ற இந்தப் பரீட்சைக்கு மொத்தமாக 517,496 பரீட்சார்த்திகள் தோற்றினர்.

அவர்களில் 407,129 பேர் பாடசாலை மாணவர்கள் மற்றும் 110,367 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாவர்.

Leave a Reply