இளவாலையில் 50 கால் போத்தல்கள் சாராயத்துடன் ஒருவர் கைது!

இளவாலை வீதியில் 50 கால் போத்தல்கள் சாராயத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போ அவர் சாராயத்தை எடுத்துச் சென்ற மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களுடன் இளவாலை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டார். குறித்த சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply